பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 கு று ங் தொகை க்

278. சகியேனடி சகியே! |

‘மழை பெய்தது. மயில்கள் ஆடின : கூவின. “அது கேட்டும் நான் எவ்வாறு சகிப்பேன் ? தனிமை பொறுப்பது எப்படி?’ என்று ஏங்கிள்ை அவள்.

உவரி ஒருத்தல் உழாஅது மடியப் புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில், கடிது இடி உருமின் பாம்பு பை அவிய, இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே , வீழ்ந்த மா மழை தழlஇப் பிரிங்தோர் கையற வந்த பையுள் மாலை, பூஞ் சினே இருந்த போழ்கண் மஞ்ஞை தாஅம்ர்ே நனங்தலே புலம்பக் கூஉம் - தோழி! - பெரும் பேதையவே !

-பொன்மணியார்

379. பாகனும் பாராட்டும்

பொருள் தேடச் சென்ற காதலன் திரும்பி வருகிருன். வெற்றி பெற்று. கார்காலம் வந்துவிட்டது. காதலி ஏங்குவாளே” என்று கலங்குகிறது அவனது கெஞ்சம். கண்டான் பாகன். வெகு வேகமாகச் செலுத்தினன் தேரை. மாலே வருமுன்னே வந்து கின்றது தேர். கண்டான் காதலியை. கட்டி அணைத்தான். மகிழ்ந்தான். மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்த தேர்ப்பாகனேப் பாராட்டுகிருன்.

‘பாகனே. நீர் தேர் தந்தாயில்லை. என் காதலிக்கு உயிர் தந்தாய்’ என்கிருன். ‘சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று, களைகலம் காமம், பெருங்தோட்கு என்று, நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி,