பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 27

கடவுள் வாழ்த்து

முருகக் கடவுளே வாழ்த்துகிறார் கவி. முருகன் எவ்விதம் இருக்கிருன் செம்மேனியணுய் விளங்குகிருன் ; தாமரை போன்ற திருவடி யுடையவனுயிருக்கிருன் ; சிவந்த குண்டுமணி போன்ற செந்நிற ஆ ைட அணிந்திருக்கிருன் ; சேவலும், வேலும் தாங்கி நிற்கிருன்; உலகினைக் காக்கிருன். உலகம் இன்ப மாயிருக்கிறது.

தாமரை புரையுங் காமர் சேவடி, பவழத்து அன்ன மேனி, திகழ் ஒளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கை, குன்றின் நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் சேவலங் கொடியோன் காப்ப

ஏம வைகல் எய்தின்றால் உலகே.

பெருந்தேவனர் பாடிய பாட்டு இது. இவர் கடைச்சங்க காலத்தினர் ; தொண்டை நாட்டினர். பாரதக் கதையைத் தமிழ் மொழியிலே முதன் முதல் செய்தவர் இவர். எனவே, பாரதம் பாடிய பெருந்தேவனர் என்று பெயர் பெற்றார்.