பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 271

மருதம் என்பது என்ன ?

வயலும் வயல் சூழ்ந்த இடமும் மருதம் எனப்படும். மருத கிலத்தின் தெய்வம் இந்திரன். மக்களிலே செல்வருக்கு என்ன பெயர்: ஊரன், மகிழ்நன் என்று பெயர். ஆண்களுக்கு வழங் கிய பெயர் இது. கிழத்தி, மனைவி என்பன பெண்களுக்கு வழங்கிய பெயர். கடுத்தர மக்களுக்கு உழவர் என்று பெயர். பெண்களை உழத்தியர் என்று அழைப்பர். சமூகத்தின் கடைசித் தட்டில் வாழ்ந்த மக்களுக்கு என்ன பெயர் ? கடையர் என்று பெயர். அதாவது என்ன ? பொருளாதார நிலையை ஒட்டியது. பொரு ளாதார ரீதியில் குறைந்தவர்களுக்குக் கடையர் என்று பெயரிட் டார்கள். பெண்களுக்குக் கடைசியர் என்று பெயர்.

வயலும், புனலும் சூழ்ந்த நாட்டிலே எத்தகைய பறவை இருக்கும் ?

வண்டாளம், மகன்றில், நாரை, அன்னம், பெரு நாரை, குருகு, தாரா-இவையே மருத நிலப் பறவைகள்.

எருமை, நீர் நாய்-இவை இரண்டும் அந் நிலத்து விலங்கு கள், ஊர்களுக்குப் பேரூர் என்றும், முதுார் என்றும் பெயர்.

ஆறு, கிணறு, குளம்-இவையே நீர் கிலேகள். தாமரைப் பூ, கழுநீர்ப் பூ, குவளைப் பூ-இவை மலர்கள். காஞ்சி மரம், வஞ்சி மரம், மருத மரம்-இவை மரம்கள். கெல் அரிசியே உணவு தானியம். இதிலே இருவகை; கெந் நெல் அரிசி என்றும் வெண் கெல் அரிசி என்றும், இருவகை. மருதநில மக்களின் இசைக் கருவிகள் இரண்டு. ஒன்று பறை. மற்றாென்று யாழ். பறையிலே இருவகை. நெல்லரிக் கினே என்று ஒன்று. மண முழவு என்பது மற்றாென்று. அதா வது தப்பட்டையும், மத்தளமும். மருதகில வாத்தியங்கள் : தோல் கருவிகள்.

யாழுக்கு மருத யாழ் என்று பெயர். அவர்கள் இசைத்த பண் மருதப் பண் எனப்படும்.