பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 275

286. வாடையும் வாட்டமும்

‘போய் வருகிறேன்” என்றான். போய் வா’ என்றாள். “ஆற்றியிரு; வருந்தாதே’ என்றான். ‘எப்பொழுது வருவாய்?’ என்று கேட்டாள். ‘வாடை வரும் காலத்தே’ என்றான். ‘குளிர் காலத்தை மறந்து விடாதே’ என்றாள். ‘மறவேன். வருவேன்’ என்றான். அவன் சென்ற பின் காட்களும் சென்றன. கூதிர் காலமும் வந்தது. பச்சைப் பாம்பு சூல் கொண்டது போல் இருந்த கரும் புப் பயிர் மெல்ல மலரத் தொட்ங்கியது. வாடையும் வீசியது. குளிரும் வந்தது. ஆனல் அவன் வரவில்லே. வர வில்லேயே’ என்று எண்ணினுள். கண்ணிர் விட்டாள்.

‘ஏன் அழுகிறாய்?’ என்று கேட்டாள் தோழி. “நான் என்ன செய்வேன்? இந்தக் கண்கள். வெட்கமின்றி கீர் சொரிகின்றன’ என்றாள் அவள். நாண் இல, மன்ற, எம் கண்ணே நாள்நேர்பு சினேப் பசும் பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன கனத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ, நுண் உறை அழி துளி தலைய # தண் வரல் வாடையும் பிரிந்திசிைேர்க்கு அழலே.

-கழார்க் கீரன் எயிற்றி.

387. விரைந்தான் வரைந்தான்

‘உன் வருத்தம்: நீங்கிற்று” என்றாள் தோழி. ‘ஏன்?’ என்றாள் அவள். “ஆமாம்! இனிமேல் அங்கே போகாதே. இங்கே போகாதே என்று அம்மா கோபிக்க மாட்டாள் அல்லவா!

வருந்தாதே! என்று நாங்கள் ஆறுதல் கூறவேண்டியதில்லை.