பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கு று ங் .ெ த எ ைக க்

குறிஞ்சி என்பது என்ன ?

நமது பழந்தமிழர்கள் என்ன செய்தார்கள் ? கிலத்தை ஐந்து வகையாகப் பிரித்தார்கள். எப்படி? குறிஞ்சி, பாலே, முல்லை, மருதம், நெய்தல் என ஐந்து.

மலேயும் மலை சூழ்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். இங்கே வாழ்ந்த மக்களுக்கு என்ன பெயர் ? உயர் குடிப் பிறந்த ஆண் களுக்குப் பொருப்பன், வெற்பன், சிலம்பன் என்று பெயர். பெண்களுக்குக் குறத்தி, கொடிச்சி என்று பெயர். மற்றை யோருக்கு குறவர். கானவர் என்றும், பெண்களுக்குக் குறத்தியர் என்றும் பெயர்.

குறிஞ்சியின் தெய்வம் முருகன். மலே காட்டு மக்கள் முருகனை வழிபாடு செய்வர்.

குறிஞ்சி நாட்டிலே உள்ள ஊர்களுக்குச் சிறுகுடி என்று பெயர். அதாவது அவர்கள் சிறு சிறு குடியிருப்புகளிலே வாழ்ந்து வந்தார்கள். -

கிளி, மயில் இரண்டும் குறிஞ்சி நாட்டுப் பறவைகள். புவி, கரடி, யானே, சிங்கம் - இவை விலங்குகள்.

அருவி, சுனே இவையே நீர் கிலேகள். சந்தனம், தேக்கு, அகில், அசோகு, காகம், மூங்கில்; இவை மலே நாட்டு மரங்கள். t

வேங்கைப் பூ, குறிஞ்சிப் பூ, காந்தள் பூ - இவை மலர்கள். மலே நெல், மூங்கில் அரிசி, தினை இவையே அவர்தம் உணவு. அவர்கள் முழங்கிய இசைக் கருவிகள் இரண்டு . ஒன்று யாழ் ; மற்றாென்று பறை. யாழுக்குக் குறிஞ்சி யாழ் என்று பெயர். பறைக்குத் தொண்டகப் பறை என்று பெயர். அவர்கள் பாடியது குறிஞ்சிப் பண் என்பது.

மலே நெல் விதைத்தல், தினை காத்தல், தேன் அழித்து எடுத் தல், கிழங்கு தோண்டி எடுத்தல் - இவை அவர்தம் தொழில்.

அருவி நீராடல், சுனே நீராடல், வெறியாடல். இவை அவர் தம் பொழுதுபோக்கு விளையாட்டுகள்.