பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 கு று ங் தொ ைக க்

உலர்ந்த துணி எப்படியிருக்கிறது? பகன்றைப் பூ மாதிரி இருக்கிறது.

‘இந்தப் பகன்றையும், மாலையும் அவர் சென்ற நாட்டில் இல்லையோ?” என்று வருந்துகிருள் அவள். இருப்பின் பிரிந்த காதலர் வந்திருப்பரே என்பது அவளது கருத்து.

நலத்தகைப் புலேத்தி பசை தோய்த்து எடுத்துத் தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும் பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும் புன்கண் மாலையும், புலம்பும், இன்றுகொல் - தோழி! - அவர் சென்ற நாட்டே?

-கழார்க் கீரன் எயிற்றியன்

803. பூங்கொடியும் பெண் கொடியும்!

ஆடல் மகளிர் வீட்டிலிருந்து வருகிருன் அவன். மனைவி யின் வீடு நோக்கி.

‘வருக !’ என்று வரவேற்கிருள் தோழி.

வயலிலே நெய்தல் மலர்கிறது. களைந்தெறிகின்றனர் உழவர். சீ! இனி இங்கே மலர்தல் கூடாது என்று எண்ணுகிறதா? இல்லை மீண்டும் பயிராகி மலர்கிறது அல்லவா. அத்தகைய குணமுடைய கொடி இவள். நீ எவ்வளவு இடர் செய்தாலும் மீண்டும் மீண்டும் உன்பால் அன்பு செலுத்துவாள்’ என்றாள்.

கைவினை மாக்கள் தம் செய்வினை முடிமார், சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட, டிேய வரம்பின் வாடிய விடினும், ‘கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னது, பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் கின் ஊர் நெய்தல் அனேயேம்-பெரும !