பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 293

அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப, வருமே சேயிழை, அந்தில் கொழுநற் காணிய அளியேன் யானே !

-கள்ளில் ஆத்திரையன்

307. மணந்தேன் ஒருநாள் . வருந்துவேன் பலநாள் !

“என்னவோ, வந்திருக்கிருன், ஏற்றுக் கொள்” என்றாள் தோழி.

“ஆமாம். வாழ்க்கைப் பட்டது ஒருநாள். வருந்துவது பல காள்! என்ன செய்வது. அவர் ஆடும் ஆட்டங்களுக்கெல்லாம் உடம்படத்தானே வேண்டியிருக்கிறது?’ என்றாள் அவள்.

அருவி அன்ன பரு உறை சிதறி யாறு நிறை பகரும் நாடனேத் தேறி, உற்றது.மன்னனும் ஒரு நாள் ; மற்று - அது தவப் பல் நாள் தோள் மயங்கி, வெளவும் பண்பின் நோய் ஆகின்றே.

- -அழிசி நச்சாத்தனர்

308. போதும் ! வராதே!

‘போதும் போதும். இங்கே ஏன் வருகிறீர்? இவளது அழகு பாழ்பண்ணி விட்டீர். இனி என்ன இருக்கிறது இங்கே? நீர் பரத்தை வீடே கதி என்று கிடப்பதையும், இவள் அழுது புலம்புவதையும் கண்டு ஊரார் வம்பு அளக்கின்றனர்” என்றாள் தோழி. வாரல் எம் சேரி ; தாரல் நின் தாரே ; அலராகின்றால் - பெரும ! - காவிரிப் பலர் ஆடு பெருங் துறை மருதொடு பிணித்த