பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 995

இவ்வளவுக்கும் அவன் அந்த ஊரிலேதான் வசிக்கிருன்; வேற்றுtர் போகவில்லை. தப்பித் தவறி வழியிலே அவளேக் கண்டு விட்டால் விர் ரென்று பாய்ந்து ஓடிவிடுவான் வில்லிலிருந்து விடுபட்டுச் செல்லும் கணேபோல!

இதை அவள் தன் தோழியிடத்திலே சொல்கிருள் :

‘நீ என்னவோ சொல்கிறாய். அவருக்கு என்னிடத்திலே சிறிதும் அன்பு இல்லை. இருந்தால் வர மாட்டாரா? ஊருக் குள்ளேயேதான் அவரும் வசிக்கிறார். இந்தத் தெருப்பக்கம் வருகி ருரா, பார்த்தியா ? வருவதே இல்லை. வந்தாலும் என்ன ? என் இனக் கட்டித் தழுவிக்கொண்டு விடுகிருரா ? வில்லெறி கணே போல விரைந்து ஒடுகிறார். யாரோ அங்கியர் போலl’

ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் ; சேரி வரினும் ஆர முயங்கார்; ஏதிலாளர் சுடலை போலக் காணுக் கழிபமன்னே - நாண் அட்டு, கல் அறிவு இழந்த காமம் வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.

-பாலை பாடிய பெருங்கடுங்கோ

311. காலம் மலையேறிப்போச்சு

ஆடல் மகளிர்களிடம் சிலகாலம் சிக்கியிருந்தான் அவன். பிறகு மனைவியின்மீது நாட்டம் சென்றது. மெதுவாக அவளது தோழியிடம் சென்றான். ‘முன்பு என்னைச் சேர்த்துவைத்தாய். இப்பொழுதும் எப்படியாவது என்னைச் சேர்த்துவிடு’ என்றான்,

“பார்க்கிறேன்’ என்று சொல்லிப் போளுள் அவள். “என்னவோ போகட்டும். கடந்ததை மறந்துவிடு. வங் திருக்கிருன். அழைத்து வைத்துக்கொள்’ என்றாள்.

‘அதெப்படி முடியும் ? இவ்வளவு நாள் கண் தெரிந்ததா ? முனிவர்களைக் கண்டு அஞ்சி ஒதுங்குகிறவர்களைப் போல அஞ்சி ஒதுங்கி பதுங்கி ஓடினரே” என்றாள் அவள்.

“முந்தியெல்லாம் வரவில்லையா?”