பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 கு று க் .ெ த ைக க்

314. வாளும் வைகறையும்

காதலன் வந்தான். கட்டி அணைத்துப் படுத்திருக்கிருள். இரவு முழுதும் இன்பக் கனவுகள் 1 விடியற்கால நேரத்திலே சிறிது கண் அயர்ந்தாள். அப்போது குக்கூ என்று கூவியது கோழி. . எல்லோரும் விழித்து எழுந்தனர். அவரவர் தம் வேலை மேல் சென்றனர். அந்த மாதிரி சந்தர்ப்பத்திலே அவள் மாத்திரம் காதலனே அணைத்துப் படுத்திருக்க முடியுமா? முடியாது. எனவே, எழுந்திருக்க வேண்டியதாயிற்று. காதலரைப் பிரிக்கும் வாள் போல் வந்ததே வைகறை என்று சபிக்கிருள். t

‘குக்கூ என்றது கோழி; அதன் எதிர் துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம் - தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

-அள்ளுர் கன்முல்லை

315. எருமையும் மனைவியும்

கணவன் பரத்தையரோடு மகிழ்ந்திருக்கிருன். மனைவி வருந்தியிருக்கிருள். அது கண்டாள் தோழி. ஆறுதலான மொழி கூற விரும்பினள்.

‘இப்படி ஒரு மனிதரும் இருப்பாரா? என்ன கல் நெஞ்சு ! கிளிபோல் உள்ள காதலியை விட்டுக் குரங்கு போன்ற காமக் கிழத்தி பின் திரிகிருரே !’ என்றாள்.

மனைவிக்குக் கோபம் வந்து விட்டது. என்ன இருந்தாலும் கொண்ட கணவன் அ ல் ல வ ! பிறர் குறைகூறினல் பொறுக்குமா ?

“அது ஏன் நமக்கு ? கன்றின் பக்கத்திலே எருமையைக் கட்டி விட்டுப் போகிருன் உழவன். எருமை என்ன செய்கிறது? கன்றைவிட்டு அப்பால் போகிறதா ? இல்லையே! அந்த மாதிரி தான். என்னேயும் என் குழந்தையையும் விட்டு அவன் போயி