பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கு று ங் .ெ த ைக க்

போர்க்களமானது செந்நிறமாகச் செய்தவன். அந்த இரத்தம் தோய்ந்த அம்பை யுடையவன்; யானேமீது ஊர்ந்து வருபவன். வீர வளையுடையவன். அவனுடைய குன்று இது. இங்கே செங் காந்தள் பூ நிறைய உள்ளது. பஞ்சமே யில்லை. நீ,கொண்டு வந்துள்ள மலர் வேண்டாம். போய் வருக வெற்பனே !’ செங்களம் படக் கொன்று, அவுணர் தேய்த்த, செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை, கழல் தொடி சேய் குன்றம் குருதிப் பூவின் குலே காந்தட்டே

-திப்புத் தோளார்

3. சித் தும் பி த் து ம்

‘என்னப்பா ஒரு மாதிரியாக இருக்கிறாய் ?”

“எப்படி யிருக்கிறேன்?’’

‘ஏதோ பித்துப் பிடித்தவன்போல் இருக்கிருயே!”

ஆமாம்”

என்ன பித்து அப்பா அது ?”

காமப் பித்து’

காமப் பித்தா? அட பாவி யார்மீது காமம் கொண்டாய்?’’

  • மலேவாணர் பெண் ஒருத்தி மீது’’

குறிஞ்சித்தலேவ, கூறுவது கேள். உன்னுடைய மலை உச்சி யிலே உற்பத்தியாகிறது அருவி. ஆனால், அது எங்கே போய் விழு கிறது? கீழே. காமமும், அத்தகையதுதான். உனது தகுதிக்கும் உயர்வுக்கும் ஒவ்வாத இடத்திலும்கூட உன்னைக் கொண்டுபோய் விடும். எச்சரிக்கை !’ பெரு வரை மிசையது கெடு வெள் அருவி முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி, சிலம்பின் இழிதரும் இலங்கு மலே வெற்ப!நோதக்கன்றே-காமம் யாவதும் நன்று என உணரார்மாட்டும் சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே.

-நக்கீரஞர்