பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 3.11

நெய்தல் என்பது என்ன ?

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்படும். நெய்தல் கிலத்தின் தேவன் வருணன்.

இந் நிலத்தில் வாழ்ந்த மக்களின் தொழில் மீன் பிடித்தல், உப்புக் காய்ச்சுதல், மீனப் பாடம் செய்தல்-இவை உப தொழில்கள்.

இந்த மக்களிலே செல்வர்க்கு என்ன பெயர் : சேர்ப்பன் என்றும் புலம்பன் என்றும் பெயர். இது ஆண்களே அழைக்கும் பெயர். பரத்தி, துளைச்சி என்பன பெண்களுக்குரிய பெயர்..

மற்றையோருக்குப் பரதர் என்று பெயர் ; அளவர் என்றும் அழைப்பதுண்டு. பெண்களுக்குப் பரத்தியர் என்றும் அனத்தியர் என்றும் பெயர்.

இங்கே காணப்பட்ட பறவை கடல் காகம் ஒன்றே. விலங்கு: சுரு மீன்.

ஊர்களுக்கு என்ன பெயர் : பாக்கம், பட்டினம். நெய்தல் பூ, தாழம் பூ, முண்டகப் பூ, அடம்பம் பூ-இவை மலர்கள். கண்டல், புன்னே, ஞாழல்-இவை மரங்கள்.

உப்பு விற்றுவந்த பொருளைக் கொண்டும் மீன் விற்றுவந்த பொருளைக் கொண்டும் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். -

நெய்தல் கில மக்களின் இசைக் கருவிகள் இரண்டு. ஒன்று பறை. மற்றாென்று யாழ். பறைக்கு என்ன பெயர் : மீன் கோட் பறை என்றும், காவாய்ப் பம்பை என்றும் பெயர்.

அவர்கள் இசைத்த யாழுக்கு விளரி யாழ் என்று பெயர். பண் : செவ்வழி.

கடல் நீரில் நீந்தி விளையாடுவதே அவர் தம் பொழுது போக்கு; விளையாட்டு.