பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31.4 கு று ங் தொ ைக க்

“மாலே நேரம். நீலமணி போன்ற நெய்தல் மலர்கள் குவி கின்றன. வாடைக் காற்று வீசுகிறது. எப்படி வீசுகிறது ? கடல் அலை மோதுவதாலே எழுந்த நீர்த் தூவல் காற்றிலே வலந்துவர வீசுகிறது. இப்படிப்பட்ட கிலேயில் இந்த ஊர் வாழ்க்கை இன்னும் சில நாளே !’ *

அதாவது என்ன பொருள்? மாலை நேரம் கண்டு அவனது காதலி வருந்துகிருள். அந்த வருத்தத்தினலே நெய்தல் மலர் போன்ற அவளது கண்கள் ஒளியிழந்தன. வாடைக் காற்று அவளது துன்பத்தை மேலும் வளர்க்கிறது. இப்படி யிருந்தால் அவள் இன்னும் சில நாட்களே உயிருடன் இருப்பாள் என்பதே.

எனவே, அவன் எனன செய்யவேண்டும்? விரைவில் வந்து அவளே மணந்து செல்லவேண்டும்.

மாக் கழி மணிப் பூக் கூம்ப, துரத் திரைப் பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ, கையற வந்த தைவரல் ஊதையொடு இன்ன உறையுட்டு ஆகும் சில் நாட்டு அம்ம - இச் சிறு நல் ஊரே.

-கெய்தற் கார்க்கியர்

334. வெந்நீரும் கண்ணிரும்

காதலன் ஒருவன் ; காதலியைப் பிரிந்து சென்றான். வரு வேன்’ என்றான் , வரவில்லை. அவனேயே கினைத்து ஏங்குகிருள் அவள். ஏங்கி ஏங்கித் துடிக்கிருள் ; வாடுகிருள்; வருந்துகிருள்; கண்ணிர் சொரிகிருள்.

‘அழாதே’ என்றாள் தோழி.

‘நான் என்னடி செய்வேன் தோழி 1 என்னல் சகிக்க முடிய வில்லையே! என் நெஞ்சு துடிக்குதே! மனம் சுக்கு நூருக வெடிக்குதே! வெந்நீர் போல் பொங்குதே கண்ணிர் ! அதைத் துடைப்பதற்கு அவரில்லேயே t’ என்று கூறிப் புலம்புகிருள்.

நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே ! இமை தீய்ப்பு அன்ன கண்ணிர் தாங்கி