பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 327

352. உள்ளமும் ஓசையும்

காதலனைப் பிரிந்து வாடுகிருள் அவள். இரவு முழுதும் தூக்கமில்லை. விழித்துக் கொண்டிருக்கிருள். இரவு நேரம் எங்கும் நிசப்தம். ஆனல் அந்தக் கடல் மாத்திரம் அலமோதிக் கொண்டிருக்கிறது. அந்த அலே ஓசை கேட்கிறது.

‘நான் தான் துன்பமுற்றேன். இரவு தூங்காமல் புலம்பு கிறேன். நீயும் இரவு முழுதும் ஒலிக்கிருயே! கடலே! யாராலே துன்பமுற்றாய்? என்ன துன்பம் உனக்கு?’ என்று கேட்கிருள்.

யார் அணங்குற்றனே-கடலே! பூழியர் சிறு தலை வெள்ளத் தோடு பரந்தன்ன மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை, வெள் வீத் தாழை திரை அலை கள்ளென் கங்குலும் கேட்கும், கின் குரலே?

-அம்மூவன்

353. மாந்தை வாழ் மங்கை

மாந்தை என்று ஒர் ஊர். கடற்கரையிலே உள்ளது. அங்கே ஒரு பெண். ஒருவன்மீது காதல் கொண்டாள். அவளோ பருவம் வந்த பெண். வீட்டினுள் அடைபட்டுக் கிடக் கிருள். காதலனைக் காண்பது எப்படி தோழி சொல்கிருள்:

‘அலேகள் என்ன செய்கின்றன? மீன்களே அப்பால் கொண்டு செல்கின்றன. சும்மா இருக்கிறதா காரை? இல்லை. மீனைக் கொத்திச் செல்கிறது. அதுபோல காதலியைப் பெற்றேர் பிரித்து வைத்தாலும் காதலன் என்ன செய்ய வேண்டும்: கொத்திச் செல்ல வேண்டும். அப்போதுதான் இவ்வூர் நல்லதா கும் அவளுக்கு. இல்லையாயின் புலம்புவாள்’ என்றாள்.

தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை காரை கிரை பெயர்ந்து அயிரை ஆரும்,