பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 33

6. மங்கையும் மந்தியும்

மலே காட்டிலே எங்கும் குரங்குகளைக் காணலாம். குரங்கு கள் என்ன செய்யும்? கூட்டம் கூட்டமாகச் செல்லும் ; ஆணும் பெண்ணுமாகச் செல்லும் ; மரத்துக்கு மரம் தாவும்; கிளைக்குக் கிளே தாவும்; பாறைக்குப் பாறை தாவும். இப்படித் தாவித் திரியும் போது என்ன நிகழ்கிறது?

தவறி விழுந்து விடுகிறது ஆண் குரங்கு; இறந்து விடுகிறது. உடனே அதன் காதலியாகிய பெண் குரங்கு கண்ணிர் வடிக்கி றது; கதறுகிறது; காதலனேப் பிரிந்த துன்பம் தாங்க முடியாது துடிக் கிறது. தனது குட்டியை அந்தக் குரங்குக் கூட்டத்திடம் ஒப் படைக்கிறது. ஒப்படைத்துவிட்டு ஒடுகிறது. செங்குத்தான பாறைமீது ஏறி கின்று கீழே விழுகிறது; சாகிறது.

“இதை கீ பார்த்ததுண்டா ம லே க ச ட ேன?’ என்று கேட்டாள் தோழி.

“பார்த்திருக்கிறேன்’

“அதைத்தான் உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்’

ஏன்?’’

இரவு நேரத்திலே நீ வருகிறாய், உனது காதலியிடம் இன் பமாக இருக்க.”

ஆமாம், அதற்கென்ன?”

“அப்படி வரும் வழியோ ஆபத்தானது’

  • serif”

“உன் உயிருக்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விட்டால்.”

நேருமோ?”

நேர்ந்தால் உன் காதலி என்ன செய்வாள் தெரியுமா?’’

என்ன செய்வாள்?’

“உன் மலேகாட்டுப் பெண்குரங்கு செய்ததையே செய்வாள்?”

  • உயிர் விடுவாளோ?’’

ஆமாம்!”

எனவே?’’

3