பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 கு று ங் தொ ைகக்

மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை துண் வலைப் பரதவர் மட மகள் கண் வலைப் படுஉம் கானலானே.

-ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்

357. கடல் அவிந்தது காதலர் வருவார்

“பொழுது போயிற்று. கடற்கரையிலே இருந்த மீனவர் பலரும் வீடு திரும்பி விட்டனர். சோலேயிலே இருள் படர்ந்து விட்டது. பனை மரத்திலே வந்து அடங்கிய அன்றிலும் தன் குரலே மெதுவாக எழுப்புகிறது. பிரிந்த உன் காதலர் வருவார்’’ என்கிருள் தோழி. கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி, துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே: மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை அன்றிலும் பையென நரலும்; இன்று அவர் வருவர்கொல் வாழி - தோழி! - நாம் நகப் புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித் தணப்பு அருங் காமம் தண்டியோரே?

-உலோச்சன்

358. வம்பும் வாட்டமும்

“சும்மா ஏன் வருந்துகிறாய்? ஊரார் வம்பு பேசுகிறார்கள்” என்றாள் தோழி.

“நான் ஒன்றும் வருந்தவில்லை. என்னவோ என்னையறியா மல் உடம்பு வாடுகிறது. அதற்காக ஊரார் ஏதாவது சொன்னல் சொல்லிக் கொண்டிருக்கட்டும். அது என்னே என்ன செய்யும்?” என்றாள் அவள். பருவத் தேன் கசை இப் பல் பறைத் தொழுதி, உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை, நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம்