பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 333.

‘போடி போ : மலேயிலே இடி இடிக்கிறது. முழங்குகிறது. கலங்கலாக நீர் வருகிறது. மலர்களைக் கொண்டு வருகிறது. இதைப் போய் வம்பு மாரி என்கிருயே! இது கால மாரிதான். மாரிக்காலம் வருமுன் வருவேன் என்று சொன்னவர் வர வில்லே மறந்தே போனர் ? நான்தான் மறவாதிருக்கிறேன்’ என்றாள் அவள். பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலும் மீ மிசைத் தாஅய், வீசும் வளி கலந்து, இழிதரும் புனலும், வாரார் . தோழி! மறந்தோர் மன்ற, மறவாம் நாமே - கால மாரி மாலை மா மலை இன் இசை உருமினம் முரலும் முன் வரல் ஏமம் செய்து அகன்றாேரே. R

-ஒளவையாா

363. கடல் செல்வரும் காதல் செல்வியும்

‘பசலே வந்து படர்ந்து விட்டது என் மேனியிலே. காதலோ அவரைப் பின் பற்றிச் சென்று விட்டது. எனது அடக்கமோ தொலைவில் போய் விட்டது. அவர் உள்ள இடம் போவோம் வா’ என்று அழைக்கிறது அறிவு. இதுவே சரியான சமயம். தாழை மலர் கிரம்பிய கடல் செல்வர் என்னேக் கடி மணம் புரிதற்கு’ என்றாள் அவள், தோழியிடம்.

சிறிது தொலைவில் கின்ற அவளது காதலன் காதிலே விழுந்தது இது. பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர் கார் இல் கெஞ்சத்து ஆர் இடையதுவே; செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே, ஆங்கண் செல்கம் எழுக’ என, ஈங்கே, வல்லா கூறியிருக்கும்; அள் இலத் தடவு கிலேத் தாழைச் சேர்ப்பற்கு இடம்மன் - தோழி! - எங் நீரிரோ?’ எனினே.

-வெள்ளுர் கிழார் மகளுர் வெண்பூதியார்