பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 337

மெல்லம் புலம்பன் கொடுமை பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே.

-மாலைமாறன்

368. நினைவும் நித்திரையும்

இரவு நேரம், தூக்கம் வரவில்லே அவளுக்கு. பெருமூச்சு விடுகிருள்; கண்ணிர் வடிக்கிருள்.

“சும்மா ஏன் அவனேயே நினைத்துக் கொண்டிருக்கிறாய்? பேசாமல் தூங்கு’ என்றாள் தோழி.

“ஆமாம் 1 ஆமாம் மான் குளம்பு போன்ற இலையும், குதிரையின் கழுத்து மணி போன்ற மலரும் உடைய அடும்ப மலர் மிக்க கடல் காடனே நான் கினைத்தேன். அதனுல் தூக்கம் வரவில்லை. இனி கினையாதிருக்கிறேன். தூக்கம் வரட்டும்’ என்றாள்.

கினையாதிருக்கவும் இயலாது ; தூக்கமும் வராது என்பது குறிப்பு.

மான் அடி அன்ன கவட்டிலே அடும்பின் தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி, ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை உள்ளேன் - தோழி ! - படீஇயர், என் கண்ணே.

-கம்பி குட்டுவன்

369, அழகைத் தா, அப்பால் போ!

“போய் வருகிறேன்” என்றான் அவன்.

எங்கே ?’ என்றாள் தோழி. பொருள் தேட’’ *பிரிவது நிச்சயமா ?”

“ஆம்”

23