பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 339

வயச் சுரு வழங்கு நீர் அத்தம் தவச் சில் நாளினன் வரவு அறியானே.

-அறிவுடைகம்பி

371. அங்கும் உண்டு-இங்கும் உண்டு !

கடல் ஒரமாக உள்ளதொரு சிறுகுடி. தாழை மடல் விரியும் சோலைகள் நிரம்பிய இடம். அந்த ஊரிலே ஒரு பெண். கடற் கரையிலே உள்ள மற்றாேர் ஊரினன் ஒருவன்மீது காதல் கொண் டாள். அவன் வசிக்குமிடம் சிறிது தூரம்.

‘அவ்வளவு தூரத்தில் இருக்கிருனே உன் காதலன். நீ எப்படி ஆற்றியிருக்கிறாய் ?’ என்றாள் தோழி.

‘அதுவா! அவரது ஊர் தூரம். ஆனல் எப்போதும் என் கெஞ்சில் இருக்கிறார். அவர் ஊரிலே மோதும் அலே நீர் எனது ஊரிலும் வந்து மோதுகிறது. அது கண்டு மனம் ஆறியிருந்தேன்; தேறியிருந்தேன்.”

வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை, குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும் கானல் கண்ணிய சிறுகுடி முன்றில், திரை வந்து பெயரும் என்ப. நத் துறந்து நெடுஞ் சேண் நாட்டார்ஆயினும், கெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் காட்டே.

-செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்

373. அவ ன் வங் த சு வ டு

இரவு முழுதும் விழித்திருந்தாள்; எழுந்து போய் பார்த்து வந்தாள். காதலன் வந்திருக்கிருனே என்று. ஆனல் இருவரும் ஏமாற நேர்ந்தது.

மறுநாள் வந்தான் அவன். அவள் சீறிள்ை. ஏன் ? இரவு வரவில்லை என்பதற்காக.