பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கு று ங் ெத ைகக்

‘இரவில் வராதே. உன் உயிருக்கு ஒரு தீங்கும் வராதிருப் பதாக, நீ நெடுநாள் வாழ்வாயாக!”

கருங் கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென, கைம்மை உய்யாக் காமர் மங் கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி, ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும் சாரல் நாட! நடு நாள் வாரல்; வாழியோ வருந்துதும் யாமே!

-கடுந்தோட் கரவீரன்.

7. சேம்பும் செவியும்

மலே நாட்டிலே சேம்பு வளர்ந்திருக்கிறது, மலைச் சேம்பு. அந்தச் சேப்பம் இலே காற்றிலே அசைகிறது. பாறையின் பக்கத் திலே இருப்பதால் எத்தகைய தோற்றமளிக்கிறது? யானை தன் செவியை ஆட்டுவது போல் இருக்கிறது. இத்தகைய மலேகாட்டு இளேஞன் அவன். பொருள் தேடுவதற்காக வெளியூர் செல்கி ருன். அந்தச் சேதியை அவனது காதலியிடம் சொல்கிருள் தோழி.

“ஆமாம்! இதை என்னிடம் சொல்ல வந்தாயோ! உனக்கு முக்தியே எனக்குத் தெரியும்’

“என்னடி தெரியும்?’’

கல் நெஞ்சரான அவர் பிரிந்து போவார். வாடைக் காலத் திலே நான் வாடித் துன்புறுவேன் என்று”

தெரியுமா?’

“எல்லாந் தெரியும். அவரைத் தடுத்து நிறுத்த முடிய வில்லை. என்னிடம் சேதி சொல்கிருள்.”

காந்தள் வேலி ஓங்கு மலே நல் நாட்டுச் செல்ப என்பவோ, கல் வரை மார்பர் . சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ,