பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 34 1

“கடலுக்கு வந்து நீராடி விளையாடினர். சோலையிலே வந்து மகிழ்ந்தார். மகளிர்களுடன் குரவைக் கூத்தாடும்போது கலந்து கொண்டார். அயலார்போல வந்து போய்க் கொண்டிருந்தார். வம்புக்கு இடமுண்டாயிற்று. தாய் கண்டுவிட்டாள். வீட்டுக் குள்ளே அடைத்துவிட்டாள். இது அவராகச் செய்த வினேதானே. சரி. இனியுள்ள பாக்கியையும் அவரே செய்து விடட்டுமே. இடைவிடாது இருக்கும் வகை தேடட்டும்!” கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும், தொடலே ஆயமொடு தழுஉஅணி அயர்ந்தும், நொதுமலர் போலக் கதுமென வந்து, முயங்கினன் செலினே, அலர்ந்தன்று மன்னே ; துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல் திருந்து இழைத் துயல்வுக் கோட்டு அசைத்த பசுங்

குழைத் தழையினும், உழையின் போகான் ; தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே.

-அஞ்சில் ஆங்தை

375. மோதும் நுரையும் போகும் உயிரும்

‘வருந்தாதே! பொறு’ என்றாள் தோழி.

‘வருந்தாதே 1 வருந்தாதே 1 பொறு ! பொறு 1 என்கிறீர் கள். காதல் என்ன பொறுக்கக் கூடியதா ? அதன் தன்மை அறி யாது பேசுகிறீர்களே ! நீரிலே தோன்றிய துரை கல்லிலே மோதி மோதிச் சிறிது சிறிதாகத் தேய்ந்து அழிவதுபோல் என் உயிர் போகிறதே!” என்றாள் அவள். ‘காமம் தாங்குமதி என்போர்தாம் அஃது அறியலர்கொல்லோ ? அனே மதுகையர்கொல் ? யாம், எம் காதலர் காணேம்ஆயின், செறிதுனி பெருகிய நெஞ்சமொடு, பெருங்iர்க் கல் பொரு சிறு நுரை போல, மெல்லமெல்ல இல்லாகுதுமே.

-கல்பொருசிறுநுரையார்