பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 343

அவளும் காதலித்தாள். சோலேயிலே இன்புற்றனர். அப்பால் !

பிரிவு அவள் வருந்தினள்.

‘நட்பு என்று எண்ணினேன். அது பகை ஆயிற்றே ! அன்பு

என்று எண்ணினேன். அது துன்பமாயிற்றே’ என்றாள்.

கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ் தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக் கொடுங் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய, நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து வெண் தோடு இரியும் வீ ததை கானல், கைதைஅம் தண் புனற் சேர்ப்பனெடு செய்தனெம்மன்ற, ஒர் பகை தரு கட்பே.

-கணக்காயன் தத்தன்

378. வளையை மாற்றலாம் பசலையை மாற்றலாமோ?

நெய்தல் நிலம். கழியிலே மீன் கொத்தி உண்ட நாரைகள் தாழை நிழலில் தூங்குகின்றன. அலை மோதுவது தாலாட்டுப் போலிருக்கிறது.

இத்தகைய நெய்தல் நிலத்திலே ஒரு சோலே. புன்னே மரச் சோலை. அச் சோலேயிலே தோழியருடன் நண்டு பிடித்து விளை யாடிக் கொண்டிருக்கிருள் அவள். மீனவர் மகள். கண்டான் ஒரு காளே. கட்டழகி மீது காதல் கொண்டான். இருவரும் இன்பம் துய்த்தனர். பிறகு அவன் சென்றான். அவனே எண்ணி ள்ை அவள் ; ஏங்கிள்ை. தோள் நெகிழ்ந்தது. வளைகள் கழன்றன. வேறு சிறிய வளைகளை அணிந்தாள். நெகிழ்வை மறைத்தாள். பசலே படர்ந்தது மேனியிலே.

“இதை எப்படி மறைப்பது ? முடியாது. தாய் கண்டு கொள்வாள். வீட்டிலே காவல் போட்டுவிடுவாள்’ என்கிருள் தோழி. அதாவது என்ன ? விரைவிலே வந்து மணம்புரிய வேண்டும்.என்பது கருத்து.