பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 347

கேட்டாள் அவள். கோபம் வந்துவிட்டது. காதலன் அல்லவா?

‘இரக்கமுள்ளவர் தானடி. சும்மா சொல்லாதே. காகம் கழியிலே மீன் உண்டு, பொழிலிலே தங்குவதுபோல களவிலே இன்பங்கண்டு மனையிலே இல்லறம் செய்வார். அவருடன், போட்ட முடிச்சு முடிந்த முடிச்சு ; நல்ல முடிச்சு ; அவிழ்க்க முடியாதது” என்றாள்.

பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு, பூக் கமழ் பொதும்பர்ச் சேர்க்கும் துறைவனெடு யாத்தேம் யாத்தன்று கட்பே ; அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே.

i 384. ந எண் டு ம் ந ங் ைக யு ம் !

“வளைகள் நெகிழ்கின்றன. உடம்பிலே சோர்வு கண்டது எனது வருத்தத்தை தாய் அறிந்தால் என்னடி செய்வேன்? சொன்னபடி வரவில்லையே அவர். கடற்கரையிலே பெண்கள் கண்டு பிடித்து விளையாடுகிறார்கள். ஒடுகிறது நண்டு. அப்போது அலே வந்து அதைக் கொண்டு செல்கிறது. மகளிரிடமிருந்து காக்கிறது. அந்த மாதிரி விரைவில் வந்து என மணந்து காக்க வேண்டாமோ? துன்பம் போ க் க வே ண் டா மோ ? வரவில்லேயே !’

ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும், நோய் மலி வருத்தம் அன்னை அறியின், உளெனே வாழி - தோழி ! - விளியாது, உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை ஒரை மகளிர் ஒராங்கு ஆட்ட, ஆய்ந்த அலவன் துன்புறு துனேபரி