பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 கு று ங் தொ ைக க்

உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு உரிமை செப்பினர் நமரே ; விரிஅலர்ப் புன்னை ஓங்கிய புலால்அம் சேரி இன் நகை ஆயத்தாரோடு இன்னும் அற்றாே, இவ் அழுங்கல் ஊரே ?

-அம்மூவன்

397. பொதியத்துச் சந்தனமே 1 பெண்ணே !’

‘இவளோ, பொதியத்துச் சந்தனம் போன்றவள் ; வெயில் காலத்திலே இனியள். பனிக்காலத்திலே தாமரை போன்றவள்; வெம்மையுடையவள். எனவே, வாடையிலும், கோடையிலும் இணைபிரியாதிருக்கத் தக்கவள். எப்படிப் பிரிவேன் இவளே ! மன் உயிர் அறியாத் துன் அரும் பொதியில் குருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப, வேனிலானே தண்ணியள்; பனியே, வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென. அலங்கு வெயிற் பொதிந்த தாமரை உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே.

-படுமரத்து மோசிக்கொற்றன்

898. கடல் நாடன் காதலுக்குக் கைம்மாறு

“கடல் நாடனுடன் காதல் செய்ததன் பயன் இதுதான? இவள் அழகு அழிந்தாள் ; தோள் நெகிழ்ந்தாள் : பசலே படர்க் தாள் ; துன்புற்றாள்; துயில் இன்றி மெலிவுற்றாள். அழிவதுதான் காதலின் பலன ?”

காதலியின் துன்பங்கண்ட தோழி கூறியது இது. தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய், அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது, பசலை ஆகி, விளிவதுகொல்லோ .