பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 357

வெண் குருகு நரலும் தண் கமழ் கானல், பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி, விலங்கு திரை உடை தரும் துறைவனெடு இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே?

399. அம் மாலையும் இம் மாலையும்

“மாலையைக் கண்டு ஏன் வருந்துகிறாய்? முன்பு நீ இந்த மாதிரி வருந்தியதில்லையே !’

“ஆமாம். முன்பு நான் கண்ட மாலே வேறு. இப்போது நான் காணும் மாலை வேறு !’

‘முன்பு கண்ட மாலே எப்படி ?”

“மகளிரோடு மலரணிந்து விழாக் கொண்டாடிய மாலே!’

‘இப்பொழுது ?”

“தனிமையிலே தவிக்கும் மாலை!”

காதலனைப் பிரிந்த காதவி தோழிக்குக் கூறியது இது.

வ்ெண் மணல் விரிந்த வீ ததை கானல் தண்ணங் துறைவன் தணவா ஊங்கே, வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும் மாலையோ அறிவேன்மன்னே; மாலை நிலம் பரந்தன்ன புன்களுெடு புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே.

-வெள்ளிவீதியார்

400. காதலியைக் கைப் பற்றியபோது

“அப்பனே! இவளைக் கை விடாதே. அன்னை அடித்தாலும் அம்மா என்று சொல்லும் குழவி போன்றவள். நீ ஒறுத்தாலும் வெறுத்தாலும் உன்பின்னே வருவாள். வேறு துணையிலள். ஆத்ரவு நீயே. ஆறுதலும் நீயே!”