பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 கு று ங் .ெ த ைக க்

ஒக்கூர் மாசாத்தியார்

இவர் பெண் புலவர். ஒக்கூர் என்பது இவரது ஊர்.

இது பாண்டி காட்டிலே திருக்கோஷ்டியூருக்கு அருகே உள்ளது.

ஒதலாந்தையார்

ஒதுவதையே தொழிலாகக் கொண்டான் ஒருவன். அவன் பெயர் ஆதன். அவனது தந்தையார் ஒரு புலவர். ஒதல் ஆதன் தந்தையார் என்பது ஒதலாந்தை யார் என்று ஆயிற்று.

கணக்காயன் தத்தனர்

கணக்கு என்றால் நெடுங் கணக்கு. அதாவது தமிழ் அரிச்சுவடி. ஆயம் என்றால் கூட்டம். பிள்ளைகளைக் கூட்டமாகச் சேர்த்து வைத்துக்கொண்டு தமிழ் அரிச் சுவடியைச் சொல்லிக் கொடுத்து வந்தார் இவர். எனவே,கணக்காயன் என்ற பெயர் ஏற்பட்டது. தத்தனர் என்பது இவரது இயற் பெயர்.

கல்பொரு சிறு நுரையார்

‘நீரிலே தோன்றுகிற குமிழியானது கல்லிலே மோதி மோதிச் சிறிதாகி அழியும். அம்மாதிரி எனது உயிரும் சிறிது சிறிதாகத் தேய்கிறதே’ என்று புலம்புகிருள் ஒருத்தி. இந்தக் கருத்தைத் தமது பாட்டிலே தெரிவித்த தால் ‘கல் பொரு சிறுநுரையார்’ என்பது இவருக்குப் பெயராயிற்று.

கழார்க்கீரன் எயிற்றியார்

கழார் என்பது மாயூரத்துக்கு அருகில் உள்ள ஓர் ஊர். இந்த ஊரினர் இப் புலவர் ; பெண் பாலார். கீரன் என்பவருக்கு உறவினர். இவர் பனிக் காலத்தையே பெரிதும் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.