பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 363

காக்கை பாடினியார் நச்செள்ளையார்

நச்செள்ளையார் என்பது இவரது இயர் பெயர். காகம் கரைந்தது. அதைச் சிறப்பித்துப் பாடினர். எனவே, காக்கை பாடினி என்ற அடைமொழி ஏற்பட்டது. இவர் பெண் பாலார்.

கால் எறி கடிகையார்

‘கரும்பின் அடிக் கட்டை மிக ருசியானது. அது போன்றது காதலியின் இதழ் இன்பம்’ என்று பாடி ர்ை இவர். எனவே, கால் எறி கடிகையார் என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்கு.

காவன் முல்லைப் பூதனர்

பூதனர் என்பது இவரது இயற் பெயர். ‘காவன் முல்லே’ என்பது புறத்திணைத் துறைகளுள் ஒன்று. அத் துறையைப் பாடுவதில் சிறப்புப் பெற்றவர் இவர். எனவே, காவன் முல்லைப் பூதனர் என்ற பெயர் ஏற். பட்டது.

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனர்

காரிக்கண்ணனர் என்பது இவரது பெயர். இவர் காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்தவர். காரி என்றால் கரிக்குருவி. இவரது கண் கரிக்குருவியின் கண்போல் இளுக்குமாம். எனவே, காரிக்கண்ணன் எனப் பெயர் பெற்றார்.

குட்டுவன் கண்ணனர்

கண்ணன் என்பது இவரது இயற் பெயர். குட்டுவன்

என்பது சேரர் தம் மரபுப் பெயர். எனவே, இவர் சேரர் மரபினர் என்று சொல்வாரும் உளர்.