பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 365

கொல்லிக் கண்ணனுர்

கொல்லி மலையைச் சேர்ந்தவர். கண்ணன் என்னும் பெயர் கொண்டவர். கொல்லிக் கண்ணன் என்று அழைக்கப் பெற்றார்,

கோக்குள முற்றஞர்

கோக்குள முற்றம் என்பது ஒர் ஊர். அவ்வூரினர் ஆத லால் இவருக்கு இப் பெயர் வழங்கலாயிற்று.

கோப்பெருஞ் சோழர்

இவர் சோழ அரசர் மரபினர். நல்ல புலவர்; புலவர் களிடத்திலே அன்பு மிக்கவர். பிசிராந்தையார் என்ற முது பெரும்புலவரின் உற்ற நண்பர்.

கோவூர் கிழார்

கோவூரைச் சேர்ந்தவர்; வேளாளர் மரபினர். இசை நூல், உள நூல் முதலியவற்றிலே வல்லவர். அஞ்சா நெஞ்சினர். அரசர்களுக்கு அறிவு புகட்டியவர் ; இடித்துக் கூறியவர்.

கோழிக் கொற்றனர்

கோழியூர் என்பது உறையூர் , திருச்சி ஜில்லாவில் உள் ளது; சோழர்களின் தலைநகர். இவ்வூரினர் இப்புலவர். கொற்றன் எனும் பெயரினர்.

சிறைக்குடி ஆந்தையார்

சிறைக்குடி என்றாேர் ஊர். அந்த ஊரிலே ஆதன் என் பார் ஒருவர். அவர் தம் தந்தையார் ஆங்தையார். ஆதன் தந்தையார் ஆங்தையார்.