பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 கு று க் ெத ைக க்

பேரெயின் முறுவலார்

சோழ நாட்டிலே காவிரியின் தென் கரையிலே தேவா ரம் பெற்ற ஸ்தலம் ஒன்றிருக்கிறது, அவ்வூருக்குப் பேரெயில் என்று பெயர். இவர் அவ்வூரினர் பேலும்.

பொதுக் கயத்துக் கீரந்தையார்

பொதுக்கயம் என்பது ஒர் ஊர். அவ்வூரினர் இப்புலவர். கீரந்தையார் என்பது இயற் பெயர்.

மடல் பாடிய மாதங்கீரனர்

மடல் ஏறுவதுபற்றிப் பாடியதாலே இவர் இப்பெயர் பெற்றார்.

மதுரைக் கதக் கண்ணனர்

கதக் கண்ணன் என்றால் சினம் மிகும் கண்களை உடை யவர் என்று பொருள். இவர் மதுரையினர். எனவே, மதுரைக் கதக் கண்ணனர் எனப் பெற்றார்.

மதுரை அளக்கர் ஞாழலார் மகளுர் மள்ளனர்

மள்ளர் என்றால் வீரர் என்று பொருள். அளக்கர் ஞாழல் என்பது ஒர் ஊர்.

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனர்

அறுவை வாணிகன் என்றால். ஆடை வியாபாரி என்று பொருள். மதுரையிலே ஆடை வியாபாரம் செய்து

வந்தார் இவர். மதுரை ஈழத்துப் பூதந்தேவளுர்

ஈழத்திலிருந்து வந்தவர்; மதுரையிலே வாழ்ந்தார்.

பூதன் என்பது இவரது தந்தையின் பெயர்.