பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 369

மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனர்

சேந்தன் என்பவர் இவரது தந்தையார். அரசர் இடும் கட்டளைகளே எழுதுபவர்.

மீன் எறி தூண்டிலார்

இவர் பாடல் ஒன்றிலே துாண்டில் போட்டு மீன் பிடிப் பது போல என் உள்ளத்தைக் கவர்ந்தான்’ என்று சொல்கிருள் காதலி ஒருத்தி. உள்ளம் கவர்ந்ததைத் தூண்டிலுக்கு ஒப்பிட்டதால் இவருக்கு மீன் எறி தூண்டிலார் என்ற பெயர் ஏற்பட்டது.

மோசி கீரஞர்

மோசி என்பது ஒர் ஊர். அவ்வூரினர் இப்புலவர். சேர னது முரசு கட்டிலில் அமர்ந்து தூங்கி விட்டார். அப் போது வந்தான் சேர அரசன். கண்டான். புலவரைக் கோபித்தான ? இல்லை. மயில் தோகையால் செய்த விசிறி கொண்டு வீசினன்.

வடம வண்ணக்கன் தாமோதரஞர்

வண்ணக்கன் என்றால் நாணயங்களை ஆராய்ந்து பரி சோதித்து நோட்டம் பார்ப்பவன் என்று பொருள். இவர் வடக்கேயிருந்து வந்தவர் ஆதலின் வடம வண் ணக்கன் என்று அழைக்கப் பெற்றார். தாமோதரன் என்பது இவரது இயற் பெயர்.

விட்ட குதிரையார்

வண்டியிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட குதிரைக்கு உவமை கூறிப் பாடினர் இவர். எனவே, விட்ட குதிரை யார் என்று அழைக்கப் பெற்றார்,


24