பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 373

வருடை

வருடை மான் என்று கூறுவர். இதன் குட்டியை மறி என் பர். இது செங்குத்தான மலைகளிலே வாழும். அன்றில்

ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்தே வாழும் இயல்புடைய

பறவை. - எழால்

புல்லூறு எனும் பறவைக்கு எழால் என்று பெயர். வங்கா என்னும் பறவையை அடித்துக் கொல்லும். கணங்துள்

பாலே கிலத்திலே வாழும் பறவைகளுள் ஒன்று. நீண்ட கால்கள் உடையது. கூட்டம் கூட்டமாக வாழும் இயல்பானது.

நுளம்பு

மாட்டு ஈயின் பெயர் நுளம்பு.

மலர்கள், செடிகள், கொடிகள், மரங்கள்

அடும்பு

நெய்தல் நிலத்திலே கடற்கரையிலே படரும் கொடி இது. மணல் மேட்டிலே படரும். இதன் இலே இரு பிரிவாக இருக்கும். எனவே இதை மான் குளம்புக்கு ஒப்பிடுவர். இதன் மலர் குதிரையின் கழுத்தில் கட்டும் சதங்கை போல் இருக்கும்,

அரலை

இதற்கு அரளி என்றும் பெயர் ; அலரி என்றும் கூறுவர்.

குறிஞ்சி கில மக்கள் இம் மலரைத் தொடுத்து முருகனுக்குச் சூட்டி

வழிபடுவர்.

ஆவிரை

மடல் ஏறி வருபவன் தனது குதிரைக்கு ஆவிரை மலர் சூடி

வருவான்.