பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 375

காந்தள்

குறிஞ்சி நிலத்திலே வளர்வது. காந்தளிலே இருவகை. வெண்காந்தள், செங்காந்தள் என்று. செங்காந்தளைத் தோன்றிட பூ என்றும் கூறுவர். குருதிப் பூ என்றும் கூறுவர். கோழியின் கொண்டை போலிருக்குமாம் இம்மலர்.

காயா மரம்

முல்லை கிலத்துக்குரிய மரம்; கார் காலத்தில் மலர்வது. இதன் மலர் நீல நிறத்தினதாயிருக்கும்.

குருந்த மரம்

முல்லே கிலத்திற்குரியது. கார்காலத்திலே மலர்வது.

குளவி

குளவி என்பது காட்டு மல்லிகை, மலே மல்லிகைக்கும் இப் பெயரே.

குறிஞ்சி

குறிஞ்சி நிலத்திற்குரியது. பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் மலருமாம். எனவே, இம்மலரில் தேன் மிகுதியாக இருப் பது இயற்கை தானே.

பகன்றை

கிலு கிலுப்பை என்றும் கூறுவர் : சிவதை என்றும் கூறுவர். இது மாலையிலே மலர்வது. வெண்ணிறமானது. பெ ரி ய இலைகளேயுடையது.

பஞ்சாய்

இது ஒரு வகைக் கோரை. நீர் தங்கிய பள்ளங்களிலே வளரும்.

பித்திகம்

பிச்சி எனப்படுவது. இது கார் காலத்தில் மலரும். சிவக் திருக்கும். மரல்

மருள் என்றும் கூறுவர். மலேச்சாரலில் வளரும்.