பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 கு று க் .ெ த ைக க்

அக வாழ்வும், ஆனந்தமும்

சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை எத்தகையது ? காதல் வாழ்க்கை, காதல் வாழ்வு வாழ்ந்தார்கள். இந்த வாழ்க்கையை எங்கே காண்கிருேம் சங்க இலக்கியங்களிலே. பெரும்பாலும் செல்வர் குடும்பத்தின் வாழ்வுதான் காண்கிருேம்.

செல்வக் குடும்பத்தில் பிறந்த பெண் ஒருத்தியும், செல்வக் குடும்பத்தில் பிறந்த இளைஞன் ஒருவனும் சந்திக்கின்றனர். எங்கே? மலை நாட்டிலே. தினப்புனத்திலே.

தினேப்புனத்திலே காவல் புரிந்துகொண்டு இருப்பாள் பருவம் வந்த பெண். துணையாகத் தோழிமார் பலரும் இருப்பர்; கிளிகளும் குருவிகளும் தினேப் பயிரை காசம் செய்ய வரும். அவற்றை ஒட்டுவார்கள். கவண் வீசி விரட்டுவார்கள். பொழுது போகவேண்டுமே. அதற்காகச் சுனை நீரிலே நீக்தி விளையாடு வார்கள் : ஆடுவார்கள்;:பாடுவார்கள்.

இந்த மாதிரியான சமயங்களிலேதான் வருவான் இளைஞன். வேட்டைமேல் வருவான். பெண்ணேக் கண்டதும் கின்று விடுவான்.

அவர்களது விளையாட்டு கண்டு மகிழ்வான். ஆடலேயும் பாடலையும் ரசிப்பான். மெய்ம்மறந்து நிற்பான். அபபடி கிற்கும் போது அவளும் அவனேயே கண்டு மகிழ்ந்து கிற்பாள். அவள் எவள்? அவள்தான் செல்வர் வீட்டு இளம் பெண். இருவர் உள்ளத்திலும் காதல் தளிர்க்கும்; கொழுந்து விடும்.

இருவரும் தனியிடத்திலே சந்திக்க எண்ணுவர். ஆளுல் சமயம் சரிப்படாது. அவனும் அவளேயே எண்ணுவான். அவளும் அவனேயே எண்ணுவாள்.

செல்வக் குடியிலே பிறந்த இளம் மங்கைக்குச் செவிலித் தாய் இருப்பாள். அவள் யார் தாயின் தோழி. இளம் வயது முதல் அவளுடன் கட்புக்கொண்டவள்; பிரியாது வாழ்பவள்.