பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 கு று க் .ெ த ைக க்

தலைவன் என்ன செய்வான் கையுறை கொடுப்பான். கையுறை கொடுப்பது என்றால் என்ன ?

மலர்களையும் தழைகளையும் பறித்துத் தொடுத்துக் கொடுப் பது. யாருக்கு ? தலேவிக்கு. தலைவியிடம் நேராகக் கொடுக்க மாட்டான். தோழியிடம் கொடுப்பான். தலைவியிடம் கொடுக்கச் சொல்வான்.

அதன் பொருள் என்ன ? தலைவியைத் தலைவன் விரும்பு கிருன் என்பதுதான். தலைவனின் கருத்து அறிந்த தோழி என்ன செய்வாள்? இருவரும் சந்திக்கச் செய்வாள். தனி இடத்திலே சக்திப்பார்கள் ; மகிழ்வார்கள்; பேசுவார்கள் ; விளையாடு வார்கள், #

இப்படிச் சிலநாள் கடக்கும். தினே முற்றிவிடும். அறுவடை செய்ய எல்லாரும் வந்துவிடுவார்கள். அப்போது அங்கே தலைவிக்கு என்ன வேலை ! ஒன்றுமில்லே பல்லவா?

‘விட்டுக்கு வா’ என்று உத்தரவிடுவாள் தாய். “சரி” என்று வீட்டுக்கு வந்துவிடுவாள். ‘.

காதலன் கதி என்ன ?.அவனே எப்படிச் சந்திப்பது ? எங்கே சந்திப்பது ? பகல் நேர த்திலே வீட்டுக்கு வரமுடியுமா ? முடியவே

முடியாது. -

காதலனேப் பார்க்காமல் அவள் எப்படி இருப்பாள் இருக்க மாட்டாள். எனவே, எவருக்கும் தெரியாமல் இரவு நேரத்திலே சக்திப்பது என்று ஏற்பாடு செய்துகொள்வார்கள். அவரவர் வீட்டுக்குப் போய்விடுவார்கள்.

இரவு நேரத்திலே சந்திப்பது என்றால் சுலபமா ? இந்தக் காலத்தில் சுலபம். அதுவும் நகர்ப் புறங்களிலே வெகு சுலபம். எக்க நேரத்தில் வேண்டுமானுலும் சந்திக்கலாம். எங்கு வேண்டு மாலுைம் சந்திக்கலாம். எவரும் தட்டிக் கேட்கமாட்டார்.

ஆனல் அந்தக் காலத்திலே அப்படி முடியாது. மலே காட்டிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். சிறு சிறு ஊர்கள். ஒர் ஊரில் வாழ்பவன் மற்றாேர் ஊருக்குள் செல்வது கடினம்.