பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 379

அதுவும் இரவு நேரத்திலே எல்லாரும் தூங்கிய பிறகு செல்வது என்றால் எப்படி ? வழி என்ன ? இந்தக் காலம் போலவா இருக்கும்? மின்சார விளக்கா போட்டிருக்கும்? தார் ரோடா போட்டிருக்கும்?

இருட்டு மலேப்பாதை 1 கொடிய விலங்குகள் நடமாடும். இந்த வழியாக வரவேண்டும். சுலபமா?

வருவான் அவன் ? எவன் ? தலேவன் ; காதலன். எதற்காக? காதலியைக் காண்பற்காக.

வருகிற வழியிலே துன்பம் ஏற்படுவது ஒரு பொருட்டல்ல கொடிய விலங்குகள் வரும். கொன்று விடலாம். ஆனல் ஊருக்குள் புகும்போதுதான் சங்கடம்.

ஊர் காவலர் இருப்பர்; விழித்து இருப்பர். வேற்று ஆள் கண்டால் யார்?’ என்று கேட்பர். எங்கே போகிறாய் ?” என்று கேட்பர். இவற்றிற்கு சரியான பதில் சொல்ல வேண் டும். இல்லாவிட்டால் பிடித்து வைத்துக் கொள்வார்கள். மறு நாள் காலேயில் ஊராரிடம் ஒப்பித்து விடுவார்கள். ஊர்ப் பொது விலே விசாரித்து உண்மை வெளியானல் வெட்கம்.

எனவே காவலர் கண்களில் படாமல் ஊருக்குள் புகல் வேண்டும். இது சுலபமா ? வந்து வந்து திரும்பிப் போய்விடு வான் பல நாள். ஏன் ? காவலர் விழித்திருப்பர். ஒருநாள் காவலர் கண்ணில் படாது ஊருக்குள் புக இயலும். புகுந்து வருவான்.

தலைவியின் வீடு தேடி வருவான். வரும்போது நாய் குரைக் கும். வேற்று ஆள் கண்டால் நாய் குரைக்காதா? உடனே அவ னுக்கு பயம் வந்துவிடும். என்ன பயம் ? தெருவிலே உள்ளவர் கள் விழித்துக்கொண்டு விடுவார்களோ என்ற பயம். எனவே, அங்கு கில்லாது ஓடிவிடுவான். வந்த வழியே திரும்பி விடுவான்.

இப்போது இவனுக்கு எதிரிகள் இருவர் தோன்றிவிட்ட னர். ஊர் காவலரும் நாயும்.