பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கு று க் .ெ தா ைகக்

ஒடுங்கு ஈர் ஒதி ஒள் நுதற் குறுமகள் நறுங் தண் ரேள் ; ஆர் அணங்கினளே! இனேயள் என்று அவட் புனே அளவு அறியேன் ; சில மெல்லியவே கிளவி, அனே மெல்லியல் யான் முயங்குங்காலே.

-ஓரம்போகியார்

11. வலியும் வயித்தியரும்

“முன் பனிக்காலம் வந்து விட்டது. வயலிலே விதைத்த உழுந்து காய்த்து முற்றி விட்டது. முற்றிய காய் எதுபோல் இருக் கிறது? பறவையின் கால்போல் இருக்கிறது. உழுந்துப் பயிரை மான் கூட்டங்கள் வந்து மேய்கின்றன.

இந் நிலையில் காதலனைப் பிரிந்த அவள் என்ன செய்தாள்? வருந்தினள். “ஐயோ! அவர் இன்னும் வரவில்லையே’ என்று ஏங்கினுள் துடித்தாள் புழுப்போல் துடித்தாள்.

கண்டாள் தோழி. அவளால் பொறுக்க முடியவில்லை. ‘ஏனடி துடிக்கிருப் ?” “என்ன செய்வேன்? தாங்க முடியவில்லையே!” ‘என்ன செய்கிறது?’ ‘மண்டையை இடிக்கிறது. வயிற்றைப் புரட்டுகிறது. மனத்தை வாட்டுகிறது. என்ன என்னவோ செய்யுதே ’.

‘வயித்தியரை அழைத்து வரட்டுமா ?” ‘வயித்தியரா ? எனக்கு அவர்தான் வயித்தியர் ! என்ன மணந்த அவர் மார்பு இருக்கிறதே, அதுதான் இதற்கு மருந்து. வேறு எதுவுமில்லே!’ என்றாள் அவள்.

பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின் ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும் அரும் பனி அற்சிரம் தீர்க்கும் மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே.

-அள்ளுர் கன்முல்லையார்