பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 383

பார்வையிலே மாறுதல். காதலனுடன் இன்பம் காண்பதற்கு முன்பு அவளது பார்வை கள்ளமற்றதாக இருக்கும். குழந்தைப் பார்வையாக இருக்கும். காதலன் நட்புக்குப்.பிறகோ பார்வை கள்ளத்தனமாக இருக்கும். -

முன்பெல்லாம் அவள் குதித்து விளையாடுவாள்; கலகல என்று சிரிப்பாள். ஒடுவாள்; ஆடுவாள்; பாடுவாள். காதலன் கட்புக்குப் பிறகோ? குதித்து விக்ளயாடமாட்டாள்; கலகல என்று சிரிக்கமாட்டாள். ஒடமாட்டாள்; ஆடமாட்டாள்.

முன்பு, எங்கே போனலும் சரி. எல்லோருடனும் சேர்ந்தே இருப்பாள்; செல்வாள். ஆனல் காதலனைக்கண்ட நாள் முதல் மாறிவிடுவாள்; எப்போதும் தனியாகவே இருக்க விரும்புவாள் எதையோ எண்ணிக்கொண்டே இருப்பாள்.

இப்படியாகத் தலைவியிடத்தே மாறுதல் தோன்றும். மாறு தல் கண்ட செவிலித்தாய் என்ன செய்வாள்? அவளது தாயிடம் சொல்லுவாள். இரண்டுபேரும் யோசிப்பார்கள். பெண்ணுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று கினைப்பார்கள். சாமிக்குப் பூசை போடுவார்கள். பூசாரியை அ ைழ த் து உடுக்கடித்துக் கேட்பார்கள்.

இந்த மாதிரியான நேரத்திலே தோழி என்ன செய்வாள்? அறத்தொடு கிற்பாள். அறத்தொடு கிற்பது என்றால் என்ன? ஒளித்த செய்தியைக் கூறுவது. ஒளித்த செய்தி எது? தலைவி ஒருவன்பால் நட்புக் கொண்டிருப்பது. தோழி, தன் தாயாகிய செவிலிக்குக் கூறுவாள். செவிலி தன் தோழியும் தலைவியின் தாயுமாகியவளிடம் சொல்வாள். அந்த நற்றாய் மற்றவரிடம் சொல்வாள்.

ஊரிலே உள்ளவர்கள் இது பற்றி வம்பு அளப்பார்கள். அப் போது தலைவியின் பெற்றாேர்கள் என்ன செய்வார்கள்? பெண் அணச் சிறையில் வைப்பார்கள். இதற்கு இற் செறித்தல் என்று பெயர்.

அதாவது என்ன? வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்று கட்டுப்பாடு செய்வார்கள். காவலில் வைப்பார்கள். அப் போது காதலனை எண்ணி எண்ணி ஏங்குவாள் அவள்.