பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 கு று ந் தொ ைக க்

பெண்ணுக்குப் பருவம் வரும்போது கன்றும் முரட்டுக்காளே யாகி கிற்கும். அந்த முரட்டுக் காளையைத் தழுவிப் பிடித்து எவன் அடக்குகிருனே அவன் அந்தப் பெண்ணை மணம் புரிவான்.

இது மருத கில மக்களிடையே நிலவிய பழக்கம். ஏறு தழுவு தல் என்று பெயர்.

செல்வர் வீட்டுக் காதலியைக் காதலித்தால் மாத்திரம் போதாது. அவளேக் காதலிப்பதற்கான தகுதியையும் நிரூபிக்க வேண்டும். தகுதியை நிரூபிப்பது எப்படி? வீரச் செயல் புரி வதன் மூலம் நிரூபிக்க வேண்டும். வீரச்செயல் எது? ஏறு தழுவுதல்.

வீரமும் காதலும் இணைந்து நின்றன. தமிழ் நாட்டிலே.

இவ்விதமாக மணம் செய்து கொண்ட பிறகு காதலனும் காதலியும் இல்லறத்தில் ஈடுபடுவார்கள். அப்படி வாழ்க்கை கடத்தி வரும்போது காதலன் என்ன செய்வான்? வெளியூர் செல்வான். எதற்காக? பொருள் தேடுவதற்காக. சில சமயங் களில் நாடு காவலுக்காகவும் வெளியூர் செல்வதுண்டு. போர் செய்வதற்காகவும் போவதுண்டு.

இவ்விதம் வெளியூர் செல்லும் தலைவன் விரைவில் திரும்பி விடுவான். கார் காலத்திலும், இளவேனில் காலத்திலும் காதலர் காதலியைப் பிரியமாட்டார்.

காதலன் பிரிந்து சென்ற காலத்திலே காதலி என்ன செய் வாள்? வருந்துவாள். மாலே கேரம் வந்துவிட்டால் வருந்துவாள். தென்றல் வீசினல் வருந்துவாள். கிலவு வந்தால் வருந்துவாள். முல்லே மலர்ந்தால் வருந்துவாள்.

காதலன் வந்த உடனே என்னகும்? முன்னேவிட பன்மடங்கு அன்புண்டாகும்.

இப்படி அன்பு வாழ்க்கை கடத்துகிறபோது பாணன் வருவான்.

பாணன் என்பவன் எவன்? இசையிலே வல்லவன். ஆடல் மகளிர்களுக்கு ஆடலும் பாடலும் கற்றுக் கொடுப்பவன்.