பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 387

இல்லறத்திலே மனைவியுடன் வாழும் தலைவனை மெதுவாக அந்தப் பக்கம் அழைத்துச் செல்வான் பாணன். எந்தப் பக்கம்?

ஆடல் மகளிர் பக்கம்.

அவர் தம் ஆடலிலும் பாடலிலும் மகிழ்ந்திருப்பான் தலைவன். மனைவியை மறந்திருப்பான். பலநாள் வரையில் வீட்டுக்கே திரும்பாமல் இருப்பான்.

ஆடல் மகளிருடனே சுற்றுவான்; எங்கும் திரிவான். நீராடி மகிழ்வான். இப்படிச் சிலநாள் சென்றதும் மனைவி வீட்டுக்குத் திரும்புவான்.

அப்போது அவள் ஊடல் கொள்வாள். அதாவது கணவன் மீது கோபமாக இருப்பாள், ஏன்? பரத்தை வீடே கதி என்று கிடந்தான் அல்லவா? மனேவியை மறந்திருந்தான் அல்லவா?

அப்படி அவள் ஊடல் கொண்டிருக்கும்போது அவளது தோழி வருவாள். ஊடல் தணிப்பாள். அல்லது அவளது செல் வக் குழந்தை வரும். அது கண்டு ஊடல் தணிவாள்.

தலைவனும் தலைவியும் பழைமைபோல் அன்புடன் வாழ்வார் கள்.

இதுதான் சங்ககாலத் தமிழரின் அகவாழ்க்கை; ஆனந்த வாழ்க்கை.