பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கு று க் .ெ தா ைக க்

குறுங் தொகை எ ன் பது எ ன் ன ?

சங்க இலக்கியங்களிலே ஒன்று குறுந்தொகை. தொகை என்றால் தொகுப்பு என்று பொருள். எதன் தொகுப்பு? பாடல் களின் தொகுப்பு. எத்தகைய பாடல்கள்? குறைந்த வரிகள் கொண்ட பாடல்கள். எனவே, குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. நான்கு அடிகள் கொண்ட பாடல்கள் முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்கள் வரை இத்தொகையிலே இடம் பெற்றுள்ளன.

சங்க இலக்கியங்களிலே நற்றிணையும் அடங்கும்; அகநானூ றும் அடங்கும். நற்றிணையோ ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடிகள் வரை உள்ள பாடல்களைக் கொண்டது. அகநானூறு பதின்மூன்று அடி முதல் 31 அடிகள் வரை உள்ள பாடல்கள் கொண்டது.

எனவே, அகநானூறு, கற்றினே, குறுந்தொகை ஆகிய இம் மூன்று நூல்களையும் நோக்குமிடத்து என்ன தெரிகிறது? இம் மூன்று நூல்களையும் தொகுத்தவர் தம் கருத்துத் தெரிகிறது. கருத்து என்ன ?

பாடல்களே எல்லாம் அளவு பற்றித் தொகுத்தனர் என்பதே. நற்றினே, குறுந்தொகை, அகநானூறு ஆகிய இம்மூன்று நூல்களிலும் உள்ள பாடல்களே நோக்குவோம். என்ன தெரி கிறது?

அகநானூற்றுப் பாடல்கள் எல்லாம் அதிகமான - நீளமான. வரிகள் கொண்டவை. எனவே, நெடுந்தொகை எனும் பெயர் அதற்கு ஏற்பட்டது.

கற்றிணேயிலே உள்ள பாடல்களோ நடுத்தர அளவு

.a6lya ,

இம் மூன்று நூல்களையும் ஒப்பு நோக்கினல் என்ன தெரியும்? குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்கள் எவை என்பது தெரியும். எவை? மூன்றினுள்ளும் மிகக் குறைவான அடிகள்