பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 3S9

உள்ளவை. இவையே குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளன. நீண்ட அடிகள் உள்ள பாடல்கள் நெடுந்தொகையில் இடம் பெற்றுள்ளன.

குறுந்தொகை, நெடுந்தொகை எனும் பெயர் சூட்டியவர் எவர்? பாடல்களேத் தொகுத்தவரே. .ெ தா. கு த் த வர் எவர்? பூரிக்கோ என்பார்.

குறுந்தொகையிலே 401 பாடல்கள் உள்ளன. இவற்றைப் பாடிய புலவர் இருநூற்று அறுவர்.

குறுந்தொகைப் பாடல்கள் என்ன கூறுகின்றன? அக ஒழுக் கம் பற்றிக் கூறுகின்றன. அக ஒழுக்கமாவது எது? உள்ளத்திலே எழுகின்ற உணர்ச்சி. எத்தகைய உணர்ச்சி? காதல் உணர்ச்சி. காதல் உள்ளத்தைக் காண்கிருேம் குறுந்தொகையிலே. எப்படிக் காண்கிருேம்? உயிருடன் காண்கிருேம். உள்ளத்தை அள்ளும் வகையில் காண்கிருேம். படித்துப் படித்து இன்புறும் வகையில் காண்கிருேம்.

காதலன், காதலி, தோழி, செவிலி, ப ா ங் க ன், பாணன், பரத்தை ஆகிய ஏழுவிதமான பாத்திரங்களைக் காண்கிருேம். இந்த எழு வகையினரும் ஏழு சுரங்களாக நிற்கின்றனர்; இன் னிசை எழுப்புகின்றனர். அதிலே உள்ளம் பறிகொடுக்கின்றாேம்; மெய் மறந்து விடுகின்றாேம். ஆகா!’ என் கிருேம்.

‘கன்றும் உண்ணுது; கலத்தினும் படாது.......எனக்குமாம் ஆகாது; என்னேக்கு முதவாது’ என்ற வரிகள் நம் உள்ளத்தைக் கவர்கின்றன; கட்டிப் பிடிக்கின்றன. வருந்தும் காதலி நம் எதிரே காட்சி தருகின்றாள்; கண்ணிர் விடுகின்றாள்; சோகமே உருவாக கிற்கின்றாள்; ஏங்குகிருள்; பெருமூச்சு விடுகிருள். காண்கிருேம். இரண்டே வரிகள்! ஒர் உருவத்தையே நம் முன் கிறுத்தி விடு கிறார் கவி. உருவம் மாத்திரமா? அல்ல; உயிர்; உணர்ச்சி; உள் ளம்; எல்லாம். எத்தகைய பாட்டு எத்தகைய பாட்டு!

‘காலே பரி தப்பினவே; கண்ணே நோக்கி நோக்கி வாளி ழந்தனவே” என்ற வரிகளைப் படிக்கும்போது நமது உள்ளம் எங்குச் செல்கின்றது? செவிலித்தாயின் பால் செல்கின்றது.