பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 39

i

12. ஆசையும் ஆர்வமும்

கட்டழகி ஒருத்தி. அவள்மீது காதல் கொண்டான் அவன். அவளும் அவனேக் காதலித்தாள். இருவரும் இன்பமாகப் பொழுது போக்கினர். பிறகு, அவன் சென்றான்.

மறுநாள். மீண்டும் அவளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை. முதல்நாள் அவளேச் சந்தித்த இடத்துக்கு வருகிருன்.

முதல்நாள் அவளேத் தழுவி இன்புற்றதை எண்ணி எண்ணி ஆனந்தமடைகிருன்.

ஆகா! எப்பேர்ப்பட்ட அழகி காந்தள் பூ, முல்லைப் பூ, குவளேப் பூ முதலியவற்றை யெல்லாம் கலந்து தொடுத்தது போன்ற அழகி அவளது மேனியின் அழகைத்தான் என்ன என்று சொல்வேன் ! அவள் மீண்டும் இங்கே வந்தால் இறுகத் தழுவி இன்புறுவேனே !’ கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை, நாறு இதழ்க் குவளேயொடு இடையிடுபு விரைஇ, ஐது தொடை மாண்ட கோதை போல, நறிய நல்லோள் மேனி முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே.

-சிறைக்குடி'ஆந்தையார்

13. தேனும் முடவனும்

“கொம்புத் தேன். மலையிலே இருக்கிறது. அதைப் பார்க் கிருன் ஒரு முடவன். ஆசை யுண்டாகிறது. காக்கிலே நீர் ஊறு கிறது. இரண்டு காலும் முடம். அவன் மரத்தின்மீது ஏறுவது எப்படி? கொம்புத் தேன் அடையை எடுப்பது எப்படி? தேனைப் பருகுவது எப்படி? இன்புறுவது எப்படி?

சிரமம் இல்லாமலே இன்பம் அனுபவிக்கிருன் அவன். எப்படி? இரண்டு கையையும் குழித்துக்கொண்டு கக்குகிருன். தேன் அடையைப் பார்த்துப் பார்த்து உள்ளங்கையை கக்கி நக்கி