பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கு று ங் .ெ தா ைக க்

போல ? தூண்டில் போட்டு மீன் பிடிக்கிருன் ஒருவன். தூண்டில் முள்ளிலே மீன் அகப்பட்டது. உடனே வேகமாக இழுக்கிருன் துரண்டிலே. அந்த மாதிரி1

மூங்கிலும் நிமிர்ந்தது. இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது அவளுக்கு.

அவள் அவனேக் காதலித்தாள். அவனும் அவளேக் காதலித் தான். இருவரும் இன்பமாக இருந்தனர். பின்பு அவன் சென்றான்.

“விரைவில் வருவேன். உன்னே மணந்து செல்வேன்’ என்றான். வரவில்லை.

‘அவன் வரவில்லையே 1’ என்று ஏங்கினுள் அவள் ; வருத்த முற்றாள். ஏக்கமும் வருத்தமும்:என்ன செய்தன ? அவள் நலனே அழித்தன. அழகு குன்றிள்ை அவள்.

“ஐயோ! இப்படி உன் அழகு குன்றிப் போகிறதே’ என்று கூறினுள் தோழி.

‘அதற்கு என்ன செய்வது ? என்றைய தினம் அவன் என் னேத் தொட்டானே அன்றே என் அழகையும் தூண்டில் போட் டுக் கவர்ந்து விட்டான். தூண்டிலில் பட்ட மீன்போல் நான் துடிக் கிறேன். என் உடல் இங்கே ; உயிர் அவனது தூண்டில் முள் ளிலே. அவன் மீண்டும் வந்தால் அன்றி என் அழகும் வராது, உயிரும் இராது’ என்றாள். யானே ஈண்டையேனே; என் நலனே, ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக் கான யானை கை விடு பசுங் கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும் கானக நாடனெடு, ஆண்டு, ஒழிந்தன்றே.

-மீனெறி தூண்டிலார்

16. க ள வு ம் கா த லு ம்

‘அப்பா சரி என்றார்’ “அப்படியா?” ‘அம்மாவும் சரி என்றாள்”