பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 43

உம்’

‘அவனும் வந்து கலியாண ஏற்பாடுகளைச் செய்கிருன்”

“ஏண்டி, நம்ம சங்கதி, அப்பா அம்மாவுக்குத் தெரியுமோ?”

தெரியும்’

‘எப்படித் தெரியும்?”

‘நான் சொன்னேன்’’

“என்ன சொன்னுய்?’’

“நீ, காதல் கொண்டாய் என்று’

“சீ போடி, ஏன் சொன்னுய்?”

“சொல்லாமல் என்ன செய்வது? நீதான் அவதிப்படுகிருயே! அதனுல்தான். நான் என் தாயிடம் சொன்னேன். என் தாய் உன் தாயிடம் சொன்னுள். உன் தாய் தந்தையிடம் சொன்னாள். உன் தந்தையோ உன் காதலனின் ஊருக்குச் சேதி சொல்லி யனுப்பினர். அவனும் வந்தான். கலியான ஏற்பாடுகளைச் செய்கிருன். உனக்கு மகிழ்ச்சிதானே’ என்றாள்.

அவள் சிரித்தாள் மெதுவாக!

ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே, நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல், நிரந்து இலங்கு வெண் பல், மடங்தை! பரிந்தனன் அல்லெனே, இறைஇறை யானே?

-uனம்பாரளுர்

17. காதலும் காரிகையும்

“இதோ பாரடி தோழி! சும்மா இப்படிப் பேசாதே’ என்று. சீறிள்ை அவள்.

“எப்படிப் பேசுகிறேன்!”

‘அவரைப் பற்றி இழிவாகப் பேசாதே’

“அப்போ நான் என்ன இழிவாகப் பேசிவிட்டேன்? இவ் வளவு நாள் ஆயிற்றே! இன்னும் திருட்டுத்தனமாகவே காதல்