பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கு று ங் .ெ த ைக க்

ஏன் வருந்துகிறாய்? உனக்குப் பரிசப் பணம் சம்பாதிக்கத் தானே அவன் வெளியூர் போயிருக்கிருன் ?’ என்றாள் தோழி.

ஆமாம். எல்லாம் சரி. என்னல் பொறுக்க முடிய வில்லையே கஷ்டமாயிருக்கிறதே!’ என்றாள் அவள்.

  • பொறுத்திரு. வருந்தாதே 1’ என்று கூறினுள் தோழி. கான மஞ்ஞை அறை ஈன்முட்டை வெயில் ஆடும் முசுவின் குருளே உருட்டும் குன்ற நாடன் கேண்மை என்றும் நன்றுமன் 1 வாழி! தோழி உண் கண் நீரொடு ஒராங்குத் தணப்ப உள்ளாது ஆற்றல் வல்லு வோர்க்கே.

-கபிலர்

22. உ. ள் ளமு ம் உ று தி யு ம்

‘கண்ணு!’ என்றாள்.

“ஏன் கண்ணே’ என்றான்.

என்னைக் கை விடுவாயோ?” என்றாள்.

‘மாட்டேன்’ என்றான்.

அது கேட்டு அவள் மனம் அமைதி பெறவில்லை. ஏன் ? கண்டாள். காதல் கொண்டாள். கருத்து ஒன்றாயினர். உள்ள மும் உடலும் ஒன்றாயின. இனிப் பிரிந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம்.

அவளது குறிப்பறிந்தான். கூந்தலேக் கோதினன்.

செங்கரும்பே! நீ சிறிதும் கவலைப்படாதே. என் தாய் யார்? உன் தாய் யார்? இவ்விருவருக்கும் முன் பின் தெரியுமா?’ என்று கேட்டான்.

தெரியாது’ என்றாள்.

‘ஏதாவது உறவு உண்டா ?”

  • இல்லை’

‘என் தந்தை யார் ? உன் தந்தை யார் ? இவ்விருவருக்கும் முன் பின் ஏதாவது உறவு உண்டா? தெரியுமா ?”

தெரியாது’.