பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 49

‘'நீ யார் ? கான் யார் ? நம் இருவருக்கும் ஏதாவது பழக்க முண்டா ?”

‘ஒன்று மில்லை”

‘அவ்விதமிருக்க நம் இருவர் உள்ளமும் ஒன்றாயின பார்த் தாயா ? அது ஏன் ? இது முன் பிறப்பின் பந்தம் அல்லவா ?”

“ஆம்”

“நம்மிடையே காதல் தோன்றியது பார்த்தாயா?”

“ஆம்’

“செம்மண் நிலத்திலே நீர் வார்த்தால் எப்படியாகும் ?”

‘நீரும், செம்மண்ணும் ஒன்றாகும்; பிரிக்க முடியாததாகும்’

“அப்படித்தான். நமது காதல்! எனவே பிரிதல் என்பது இல்லை. அஞ்சாதே. கவலைப் படாதே கண்ணே!” என்றான்.

‘இல்லை’ என்றாள். யாயும் ஞாயும் யாராகியரோ ! எங்தையும் நுங்தையும் எம்முறைக் கேளிர் ? யானும் நீயும் எவ்வழி அறிதும் ? செம்புலப் பெய்ர்ே போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

-செம்புலப் பெய்ரோர்

23. அன்பும் அருவியும்

‘உன் தயவு இருந்தால் போதும்’ என்றான் அவன். ‘தயவா? எதற்கு ?’ என்றாள் அவள், ‘சங்கிலி அறுந்து போகாமல் இருப்பதற்கு” ‘அதற்கு என்ன செய்ய வேண்டும் ?” “ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும்’ ‘என்ன ஏற்பாடு ?” “அப்படி... கொஞ்சம் இரவு நேரத்தில் அவளுடன் பேசி விட்டுப் போக’

‘மலேநாடனே l கேள் ! உன் மலேயிலே மழை பெய்கிறது. பிறகு கின்று விடுகிறது. கின்ற பிறகும்கூட அந்த நீர் அருவியாக வருகிறது; ஒலிக்கிறது அல்லவா! அந்த மாதிரிதான். இரவு

4