பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 5 1

25. அணைத்தான் : அழைத்தாள்!

‘என்னவோ அப்பா, நீ ஆசைப்பட்டாய். அவளேயே தினத்து நினைத்து உருகுகிறேன்’ என்றாய், கண்ணிர் விட்டாய்; காதல் கொண்டு விட்டேன்’ என்றாய் கணமும் பொறுக்க மாட் டேன்’ என்றாய்; உயிர் தரியேன்” என்றாய். கேட்டேன் நான். எனக்கும் மனசு எப்படியோ ஆகிவிட்டது. இரக்கம் வந்தது. ஐயோ பாவம் என்று எண்ணினேன். இவளிடம் சொன்னேன். அதற்கு இவள் இணங்கவில்லை. மெதுவாக அவள் மனதை மாற்றி னேன், இதயத்தைக் கரைத்தேன். நல்ல வார்த்தை சொன்னேன். நயமாகச் சொன்னேன். இளகும்படி சொன்னேன்.உன்மீது காதல் உண்டுபண்ணினேன். அவளே கினேத்து கினைத்து நீ உருகுவதை உரைத்தேன். கேட்டாள்; “சரி” என்றாள், அழைத்து வந்தேன். நீயும் அவளே அணேத்தாய். இன்புற்றாய். இந்த ஞாழல் மரத்து நிழலிலே அவளது கற்பைச் சூறையாடி விட்டாய். ஆடவர் கை படாத பாவை அவள். இன்று உன் கை பட்டுவிட்டது. முகராத முல்லே அவள். நீ முகர்ந்து விட்டாய். இனி கான் என்ன சொல்ல இருக்கிறது உனக்கு? இனிமேல் இவள் உன்னேயே நிஜனத்து நினைத்து வருந்துவாள் கடலேக் கண்டு வருந்துவாள் ; இலவைக் கண்டு வருந்துவாள்.மாலே கண்டு வருந்துவாள். வருக்த விடாதே. இதோ இந்தக் கடற்கரை யோரமாகவே வா. அதோ தெரிகிறதே! பனமரத் தோப்பு. அதுதான் எங்களுடைய சிற்றுார். அங்கே வா. வரலாம். அடிக்கடி வா. வந்து உன் காதலிக்கு இன்பம் தா. மறந்துவிட மாட்டாயே! மறவாதே போய் வா! நாங் கிளும் வருகிருேம்”. இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி, ப்சு நனே ஞாழற் பல் சினே ஒரு சிறைப் புது நலன் இழந்த புலம்புமார் உடையள்; உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக் கடலும் கான்லும் தோன்றும் மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே.

-வடம வண்ணக்கன் பேரிசாத்தன்