பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 57

31. சார நாடன் சாய்த்தான் !

மலே நாட்டிலே ஒருபுறம் மிளகு விளேகிறது. மற்றாெரு புறம் பலா வளர்கிறது. அந்தப் பலா மரத்திலே கொம்புக்குக் கொம்பு பலாப்பழம் தொங்குகிறது. கம கம’ என்று வாசனை வீசுகிறது. அந்த மலேயிலே இரவு நேரத்திலே இடித்து முழங்கிப் பெரு மழை பெய்கிறது. அப்போது ஒர் ஆண் குரங்கு, பலாப் பழத்தைக் கீழே தள்ளுகிறது. கீழே தள்ளிய உடனே, மழை நீர் அருவியாகப் பெருக்கெடுத்து ஒடி அந்தப் பலாவை உருட்டிச் செல்கிறது. எங்கே? நீர் உண்ணும் துறைக்கு.

எனவே, மலேயுச்சிலே பழுத்த பலாப்பழம் அருவியால் உருட்டிச் செல்லப்பட்டு மக்கள் கையில் போய்ச் சேருகிறது.

இத்தகைய மலே நாடன் ஒருவன் ஒருத்தியைக் காதல் செய்தான். இன்னும் கலியாணம் செய்து கொள்ளவில்லை.

ஒரு நாள் அவன் வந்தான். வேலிப்புறத்தே கின்று கொண் டிருந்தான்.

எத்தனை நாளேக்குக் கலியாணம் செய்யாமல் இப்படி இருப்பாய் ?’ என்று கேட்க நினைத்தாள் தோழி. அப்படிக் கேட்பது நாகரிகமில்லையல்லவா? எனவே, குறிப்பாகக் கூறுகிருள்; “ சாரல் நாடன் காதலால் உன் மேனி மெலிந்தது. ஆனல், நீயோ அன்பில் குறையவில்லை’ என்றாள்.

அதன் பொருள் என்ன ? * “ உன் காதலி வாடுகிருள் ; விரைவில் மணம் புரிவாய் ’ என்பதே.

எற்றாே வாழி ?-தோழி 1-முற்றுபு கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க் கலே தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி, வரை இழி அருவி உண்துறைத் தரூஉம் குன்ற நாடன் கேண்மை மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே.

-மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்