பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கு று ங் தொ ைக க்

“என்னவோ பித்துப் பிடித்தவள் மாதிரி இருக்கிருளே!’

“ஆமாம்! அதுதான் எனக்கும் விளங்கவில்லே’

‘சாப்பிடுகிருளா? இல்லையா?”

‘இல்லையே!”

என்ன சொல்கிருள்?”

வேண்டாம் என் கிருள்’

  • ஏன் வேண்டாமாம்?’’

பைசியில்லை என்கிருள்”

பேசாமல் விட்டு விட்டாயோ?”

விடுவேன?”

  • என்ன செய்தாய்?’’

‘வலுக் கட்டாயம் செய்தேன்’

“என்ன ஆயிற்று?’

“ஒருபிடி கூட உள்ளே செல்லவில்லை’

விளையாடுகிருளா?”

‘ஏது? அதுவுமில்லையே! முன்பு ஆடிப்பாடி ஆனந்தமாகச் சிரித்து விளையாடுவாள்’

‘இப்போது?’

ஒன்றுமில்லை. சிரிக்கவே மாட்டேன் என்கிருள். உற்சா கமே இல்லே’

காரணம் என்னவாயிருக்கலாம்?’

‘ஏதாவது பேய், பிசாசு பிடித்திருக்குமோ? தெய்வக்குற்ற மாக இருக்குமோ?”

‘குறி கேட்டுப் பார்த்து விடலாமா?

‘அதுதான் நானும் கினேக்கிறேன்’

குறி சொல்பவள் ஒருத்தியை அழைத்துக் கொண்டு வந்தார் கள். பம்பை அடித்தார்கள். பாட்டுப் பாடினர்கள்.

“தெய்வக் குற்றம் அம்மா இது’ என்றாள் குறி சொல்பவள்.

சரி. தெய்வத்துக்குப் பூசைபோடு” என்று கூறினர்கள். பூசைக்கு ஏற்பாடுகள் நடந்தன.

அப்போது தோழி சொல்கிருள். எவருடைய தோழி? காதல் கொண்டாளே! அந்தக் காரிகையின் தோழி. எவரிடம் சொல் கிருள்? தன் தாயிடம். என்ன சொல்கிருள்?