பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 69

அந்தத் தின யுணவை மயில் உண்டு விடுகிறது. அதனல், மயில், வெறியாடுகிறது.

இதைக் கண்டாள் அவள். தனது நிலையை எண்ணிப் பார்க்கிருள். மலே நாட்டு இளைஞன் ஒருவனேக் காதலித்தாள். அவனும் அவளேக் காதலித்தான். இன்பமாக இருந்தனர். பிறகு சென்றான். சென்றவன் வரவே யில்லே. நாட்கள் பல சென்றன. அவனே நினைத்து வருந்துகிருள் அவள்.

வெறியாடும் மயில் போல் ஆனேனே !’ என்று புலம்புகிருள்.

“அவனது நட்பு இன்பம் தரவில்லையே! கண்ணிர் வடியச் செய்யுதே’ என்று கலங்குகிருள்.

புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக் கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல் அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள் வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும் சூர் மலே நாடன் கேண்மை நீர் மலி கண்ணுெடு நினைப்பு ஆகின்றே.

-நக்கீரர்

43. வற்றாத ஊற்று! வரையாத இன்பம் !

மலே நாட்டிலே வானளாவி வளர்ந்திருக்கும் இற்றி மரங்கள். அவற்றினின்றும் வெண்மையான விழுதுகள் தொங்கும். தொலே விலிருந்து பார்ப்பவருக்கு அருவி போல் காட்சி தரும்.

இத்தகைய மலே நாடன் ஒருவன் ஒருத்தியைக் காதலித்தான். சில நாள் இன்பம், பிறகு வேறு பக்கம் திரும்பின்ை.

சரி, இவனுக்கு நம் மீது அன்பில்லை’ என்று கோபித்திருக் தாள் அவள்.

‘அப்படி ஒன்று மில்லை. அவர் என்றும் போல் தான் இருக் கிறார். அன்பு குறையவே இல்லை’ என்று கூறினர் சிலர் தலே வன் பொருட்டுத் தூது வந்து.

“அப்படியானல் சரி. தீது இல்லாத நெஞ்சுடன் அப்படிக்