பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மக்களுக்கு என்றால் மக்களை அவர்கள் அறியவில்லை என் பேன் நான். மக்கள் எதை விரும்புகிறார்கள் ?

பதவுரை, பொழிப்புரை, கருத்துரையா வேண்டுகின்றனர் ? இல்லை ; இல்லை. பின் என்ன ?

பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றிப் புகழ்ந்து புகழ்ந்து கூறு கிறார்களே ! அவை என்ன சொல்கின்றன என்று அறிய விரும்பு கின்றனர்.

அறியும் வகையிலா இருக்கின்றது மக்கள் பதிப்பு ? இல்லே ; இல்லை.

மக்கள் பதிப்பு எப்படி இருத்தல் வேண்டும் ?

மக்களுக்கு விளங்கும் வகையிலே இருத்தல் வேண்டும். விளங்கினல் மட்டும் போதுமா ? போதாது.

சொல்லும் போது சுவைதரச் சொல்ல வேண்டும். கேட்க இன்பமாயிருக்க வேண்டும். படிக்கப் படிக்க அலுப்பு ஏற்படா திருக்க வேண்டும்.

விஷயம் என்னவோ நல்லதுதான் ; இனியதுதான். எனி னும் சொல்பவன் தனது திறமைக் குறைவினலே நல்ல விஷயத் தையும் பாழாக்கி விடலாம் அல்லவா ? தித்திக்கும் சுவைதரு செய் திகளையும் வேம்பாக்கி விடலாமல்லவா !

பெரும்பாலான மக்களுக்கு எப்படிச் சொன்னல் விளங்கும் ? எப்படிச் சொன்னல் ஆர்வமுடன் படிப்பார்கள் ? அப்படிச் சொல்ல வேண்டும்.

பழந்தமிழ் இலக்கியங்களிலே உள்ள கவிதை நயம் - அணி அழகு - உவமை அழகு - சொல் அழகு - இவை எல்லாம் எவ ருக்கு? இலக்கிய ஆராய்ச்சியிலே.ஈடுபட்டிருப்பவருக்கு. பெரும் பாலான மக்கள் எதிலே ஈடுபடுவார்கள் ? கவிதை நயத்திலே ஈடுபடுவார்களா ? சொல் அழகிலே ஈடுபவார்களா ? அணியிலே ஈடுபடுவார்களா ? மாட்டார்கள்.